16.3 C
Scarborough

டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தம் குறித்து சர்ச்சை: ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய விளக்கம்

Must read

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிர்வாகம், தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரேவிஸை ஒப்பந்தம் செய்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்குக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வீரரான டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்திருந்தது. குர்ஜப்னீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ரூ.2.20 கோடி தொகைக்கே டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யபப்ட்டார்.

இந்​நிலை​யில் டெவால்ட் பிரே​விஸுக்கு அதிக தொகை கொடுக்க சிஎஸ்கே அணி நிர்​வாகம் தயா​ராக இருந்​த​தாக, இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரரும், நடப்பு சீசனில் சிஎஸ்கே அணிக்​காக விளை​யாடிய​வரு​மான ரவிச்​சந்​திரன் அஸ்​வின் தனது யூடியூப் சானலில் சில தினங்​களுக்கு முன்​னர் தெரி​வித்​திருந்​தார்.

இது பெரும் சர்ச்​சையை எழுப்​பியது. இதையடுத்து சிஎஸ்கே அணி நிர்​வாகம் அளித்த விளக்​கத்​தில், “ஐபிஎல் 2025 சீசனின் நடு​வில் டெவால்ட் பிரெ​விஸை ஒப்​பந்​தம் செய்​தது அனைத்​தும் முறைப்​படியே நடை​பெற்​றது. இதில் எந்த விதி​யை​யும் சிஎஸ்கே நிர்​வாகம் மீற​வில்​லை” என்று தெரி​வித்​திருந்​தது.

இதைத் தொடர்ந்து நேற்று ரவிச்​சந்​திரன் அஸ்​வின் கூறிய​தாவது: டெவால்ட் பிரே​விஸை சிஎஸ்கே அணி ஒப்​பந்​தம் செய்​தது குறித்து அணி நிர்​வாகம் விளக்​கம் அளித்​துள்​ளது. எக்ஸ் சமூக வலை​தளத்​தில் அந்த பதிவை நான் பார்த்​தேன். டெவால்ட் பிரே​விஸ் குறித்து நான் பேசிய வீடியோ​வில் அவரது ஆட்​டம் குறித்து மட்​டுமே நான் பேசி இருந்​தேன். சரி​யான நேரத்​தில் அவரை சிஎஸ்கே அணி ஒப்​பந்​தம் செய்​துள்​ளது என்​று​தான் நான் கூறி இருந்​தேன்.

அந்த வீடியோவை முழு​வது​மாக பார்த்​தவர்​கள் இப்​படி கூறு​வதற்கு வாய்ப்​பில்​லை. அந்த வீடியோ​வின் சில நிமிடங்​களை மட்​டுமே பார்த்​தவர்​கள்​தான் இவ்​வாறு தகவலை திரித்து கூறுகின்​றனர்.

இந்த விவ​காரத்​தின் தலைப்பு எப்​படி வந்​திருக்க வேண்​டுமென்​றால் ‘சரி​யான நேரத்​தில் டெவால்ட் பிரே​விஸை ஒப்​பந்​தம் செய்த சிஎஸ்கே அணி!’ என்​று​தான் வந்​திருக்க வேண்​டும். ஆனால், மாற்றி அர்த்​தம் செய்து கொண்​ட​வர்​கள் குறித்து எனக்கு எந்த கருத்​தும் இல்​லை.

டெவால்ட் பிரே​விஸை எந்த தொகைக்கு ஒப்​பந்​தம் செய்​தார்​கள் என நான் பேச​வில்​லை. ஏனென்​றால் அந்​தத் தகவல் குறித்து எனக்கு தெரி​யாது. ஆனால், எனக்கு தெரிந்​தது எல்​லாம் அவரை ஒப்​பந்​தம் செய்ய வேறு சில அணி​களும் ஆர்​வத்​துடன் இருந்​ததுதான்.

இன்​றைய காலத்​தில் சரி​யான விஷ​யத்​துக்கு கூட நாம் விளக்​கம்​ தர வேண்​டி உள்​ளது. இவ்​வாறு அஸ்​வின்​ விளக்​கம்​ அளித்​துள்​ளார்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article