வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 10,000க்கும் மேற்பட்ட ஏர் கனடா விமான பணியாளர்களை கனடா தொழில்துறை உறவுகள் சபை (CIRB) பணிக்குத் திரும்ப உத்தரவிடும் என்று வேலைவாய்ப்பு அமைச்சர் பேட்டி ஹஜ்டு தெரிவித்தார்.
ஒட்டாவாவில் நடந்த ஒரு செய்தி மாநாட்டில் பேசிய ஹஜ்டு, ஏர் கனடா மற்றும் அதன் ஊழியர்கள் “தொழில்துறை அமைதியைப் பாதுகாப்பதற்கும் நாட்டினதும் மக்களதும் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்கும் தங்கள் செயல்பாடுகள் மற்றும் கடமைகளை மீண்டும் தொடரஉத்தரவிடுமாறு தொழில்துறை உறவுகள் சபைக்கு அறிவுறுத்தியதாக கூறினார்.
வேலைநிறுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஏர் கனடா அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஏர் கனடா இந்த நடவடிக்கையை கோரியதைத் தொடர்ந்து, தொழிலாளர் பிரச்சினைகளில் அமைச்சர்கள் தலையீட்டை அனுமதிக்கும் கனடா தொழிலாளர் குறியீட்டின் பிரிவு 107 இன் கீழ் அரசாங்கம் செயல்பட்டதாக கனேடிய பொது ஊழியர் சங்கம் (CUPE) தெரிவித்துள்ளது.
தொழில் துறை உறவுகள் சபையின் செயல்முறை இடம்பெற்று கொண்டிருப்பதால், விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்த கலந்துரையாடல் மிக விரைவில் நடைபெறும் என என்று ஏர் கனடா கூறியுள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு மற்றும் அவர்களின் விமானம் இயக்கப்படுவதாக பட்டியலிடப்படாவிட்டால் விமான நிலையத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வாடிக்கையாளர்களுக்கு ஏர் கனடா அறிவுறுத்தியுள்ளது.
ஏர் கனடா விமான பணியாளர்கள், ஊதிய உயர்வு மற்றும் தரைவழி கடமைகளுக்கான இழப்பீடு கோரி, அமைப்பு ரீதியான வேலைநிறுத்தத்தைத் தொடங்கியதாக அவர்களின் தொழிற்சங்கமான CUPE தெரிவித்துள்ளது.