பாகிஸ்தானில் கைபர் பக்துவா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பீடித்து வரும் கடும் மழை பல்வேறு அனர்த்தங்களுக்கு காரணமாகியுள்ளது.
கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, கனமழை, வெள்ளத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம் வரும் 21ம் திகதி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை, மீட்புப்பணிகளும் துரிதமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.