இந்தியாவில் இருந்து நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு எண்ணெய் கப்பலொன்று முதன்முறையாக சீனாவுக்குச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்ய – உக்ரைன்போர் காரணமாக ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிதாக விதித்த தடைகளால் இந்திய, ரஷ்ய மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான நயாரா நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நயாரா நிறுவனத்தின் எண்ணெய் கப்பல்கள் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே குஜராத்தின் வடினார் துறைமுகத்தில் இருந்து நயாரா நிறுவன எண்ணெய் கப்பலொன்று சீனாவுக்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிற்கு செல்ல வேண்டிய கப்பல், பொருளாதார தடைகளால் சீனாவின் சூஷான் துறைமுகத்திற்கு செல்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து 5 இலட்சம் பீப்பாய் டீசல் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் எல்லை பிரச்சினை காரணமாக இந்தியா – சீனா உறவு பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், 2021ம் ஆண்டுக்கு பிறகு இந்திய எண்ணெய் கப்பல் சீனாவிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.