பாகிஸ்தான் இராணுவத்தின் போர் திறனை மேலும் மேம்படுத்த ‘இராணுவ ஏவுகணை படை’ என்ற தனி இராணுவப் பிரிவை உருவாக்குவதாக அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா உடனான சமீபத்திய மோதலின் எதிரொலியால், ஏவுகணைத் திறனை அதிகரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

