கனடாவின் கிரேட்டர் டொரோன்டோ பகுதியில் அமைந்துள்ள சுமார் ஆறு நகரங்களில் திறந்தவெளி தீ மூட்டுதலுக்கு தடை விதித்துள்ளது.
மிகவும் வெப்பமான வானிலை காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அஜாக்ஸ், அரோரா, நியூமார்க்கெட், ஓக்வில், ஒஷாவா மற்றும் பீட்டர்பரோ ஆகிய நகரங்களில் திறந்தவெளி தீ மூட்டுதலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முறையான அனுமதி பெற்றவர்களும் தீ மூட்டல்களை மேற்கொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான காற்று தரம் மற்றும் மிகவும் வறண்ட நிலைகள் தொடர்பான கரிசனைகள் காரணமாக, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திறந்தவெளி தீ மூட்டல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எந்தவொரு திறந்தவெளி தீ மூட்டுதல் அனுமதிகளும் வழங்கப்படாது,” என்று அஜாக்ஸ் நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
தீக்குச்சிகள் மற்றும் லைட்டர்கள் குழந்தைகளுக்கு எளிதில் கிடைக்காதவாறு பாதுகாக்கவும், வெளியில் சிகரெட் துண்டுகளை வீசி எறியும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.