16.4 C
Scarborough

யாழில் ஓடும் ரயிலில் ஏற முற்பட்ட யுவதிக்கு ஏற்பட்ட நிலை

Must read

யாழ். காங்கேசந்துறையில் ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட யுவதியொருவர் விபத்துக்குள்ளாகியதில் அவரது ஒரு கால் முற்றாக சிதைவடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு கொழும்பு நோக்கி புறப்பட்ட இரவு தபால் புகையிரதத்தில், ஓடி ஏற முற்பட்ட வேளை கால் இடறி, விழுந்த வேளை புகையிரதத்திற்கும், புகையிரத மேடைக்கும் இடையில் கால் அகப்பட்டுள்ளது.

அதனால் யுவதியின் கால் முற்றாக சிதைவடைந்த நிலையில், அவரை மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

குறித்த யுவதி குருநாகல் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, சொந்த இடத்திற்கு திரும்ப புகையிரதத்தில் ஏற முற்பட்ட போதே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article