13.4 C
Scarborough

ரசிய ஜனாதிபதியின் இரகசிய மகள்? பிரான்ஸில் வாழ்கிறார்!

Must read

மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சவாலாக விளங்கும் ரசிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் தற்போது வெளியாகி வரும் செய்தி அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்காது என்று ரசிய ஜனாதிபதி மாளிகை அறிவித்திருக்கிறது.

புட்டினின் இரகசிய மகள் என கூறப்படும் 22 வயதான எலிசவேதா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புட்டின் ரசியாவின் ஜனாதிபதியாக இருந்தாலும் அவரது தனிப்பட்ட வாழக்கை பற்றிய விபரங்கள் ஒருபோதும் வெளியாகியதில்லை.

ஆனாலும் சமீபத்தில் அவருடைய இரகசிய மகள் என கூறப்படும் எலிசவேதா வெளியிட்டுள்ள பதிவு அவருடைய இரகசிய வாழ்க்கையை அம்பலப்படுத்தியுள்ளதாக த நியுயோர்க் போஸ்ட் செய்தி நிறுவனம் (The New York Post News Agency) தெரிவித்துள்ளது.

தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழும் எலிசவேதா, தனது தனிப்பட்ட வாழ்க்கை விரக்தியடைவதற்கு புட்டின் காரணம் என்றும் தந்தை என்ற முறையில் அவருடன் தன்கிருந்த உறவு வேதனை தருவதாகவும் சமூகவலைத்தள பதிவில் அவர் கூறியிருக்கிறார்.

தனது வாழ்க்கை மாத்திரமல்ல தற்போது பல மில்லியன் உயிர்களை புட்டின் பலியெடுத்துள்ளார் என்றும் அவருடைய போர் வெறி இன்னமும் ஓயவில்லை எனவும் எலிசவேதா குறிப்பிட்டுள்ளார்.

2000 ஆம் ஆண்டு முதலே ரசியாவில் ஜனாதிபதியாகவும் பின்னர் பிரதமராகவும் அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாகவும் பதவி வகித்து வரும் புட்டின், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் சவாலாக இருப்பதுடன் சீனவுடன் நெருக்கமான உறவையும் பேணி வருகிறார்.

இந்தியாவுடன் நீண்டகால உறவை பேணிவரும் புட்டின், பிறிக்ஸ் பொருளாதார கட்டமைப்பை உலகின் முக்கிய பிரதான பொருளாதார மையமாக மாற்ற முற்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article