Ottawa வில் உள்ள Israel தூதுவர் காசாவில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு கனடாவின் கண்டனத்தை நிராகரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். பணயக்கைதிகளை விடுவிக்க Hamas மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரிவான கட்டமைப்பை ஆதரிக்கவும் தூதுவர் Iddo Moed இன் அறிக்கை கனடாவை வலியுறுத்துகிறது.
வியாழக்கிழமை பிரதமர் Mark Carney, Israel அரசாங்கம் Gaza வில் மனிதாபிமான நெருக்கடியைத் தடுக்கத் தவறிவிட்டதாகவும், உதவியை மறுப்பதன் மூலம் சர்வதேச சட்டத்தை மீறியதாகவும் Israel அரசாங்கம் மீது
குற்றம் சாட்டியமைக்கு பதிலளிக்கும் விதமாகவே Israel தூதுவரின் அறிக்கை வெளிவந்துள்ளது.
X தளத்தில் ஒரு பதிவில், உதவி விநியோகத்தில் Israel இன் கட்டுப்பாட்டை சர்வதேச அமைப்புகளின் தலைமையிலான மனிதாபிமான உதவியின் விரிவான ஏற்பாடுகள் மூலம் மாற்ற வேண்டும் என்று Carney கூறினார்.
சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்த Israel உறுதிபூண்டுள்ளதாகவும், Gaza விற்கு உதவிகளை எளிதாக்குவதில் செயலில் உள்ள பங்காளியாக பணியாற்றுவதாகவும் Moed தனது அறிக்கையில் வலியுறுத்துகிறார்.
Gaza வில் மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்து இந்த வார தொடக்கத்தில் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்ட United Kingdom, Japan மற்றும் Australia ஆகிய இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளுடன் கனடாவும் ஓர் நாடாக இணைந்துள்ளது.