உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கன 4×400 மீட்டர் ரிலே போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த பிரிட்டிஷ் அணிக்கு 27 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் 2:56.47 நேரத்தில் பந்தயத்தை வென்ற அமெரிக்க அணி, 1997 மற்றும் 2002 க்கு இடையில் செயல்திறனை அதிகரிக்கும் ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியதாக 2008 இல் தெரியவந்ததை அடுத்து பட்டம் பறிக்கப்பட்டது.
இந்நிலையில் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்த பிரிட்டனின் ஆண்கள் 4×400 மீட்டர் ரிலே அணிக்கு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட முதல் வெற்றிக்கான தங்கப் பதக்கங்கள் டயமண்ட் லீக்கில் நேற்று அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டன.
அமெரிக்காவின் தகுதி நீக்கத்தைத் தொடர்ந்து ரோஜர் பிளாக், இவான் தாமஸ், ஜேமி பால்ச், மார்க் ரிச்சர்ட்சன் மற்றும் மார்க் ஹில்டன் (ஹீட்ஸில் ஓடியவர்) சம்பியன்களாக உயர்த்தப்பட்டனர்.
பிரிட்டன் அணிக்கு வெற்றியை வழங்கும் செயல்முறை, விசாரணை மற்றும் மேல்முறையீடுகளினால் சுமார் 3 தாசாப்தங்களை எடுத்துள்ளது.
இந்நிலையில் பிரிட்டன், மேடையின் மேல் படியில் தங்கள் தருணத்திற்காக கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக காத்திருந்த பிரிட்டிஷ் விளையாட்டு வீரர்களின் நேர்மை மற்றும் விடாமுயற்சியைக் கொண்டாடுகிறது.