மாவத்தகமவில் கைவிடப்பட்ட குழந்தையை தத்தெடுக்க 1,000 க்கும் மேற்பட்ட அழைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மாவத்தகம, பரகஹதெனியவில் நெல் வயலில் ஒரு மரத்தின் கீழ் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு நாள் ஆன பெண் குழந்தையை தத்தெடுக்க 1,000 க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து பல அழைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
குழந்தையை தத்தெடுப்பது குறித்து விசாரித்த அனைவருக்கும் தத்தெடுப்பு செயல்பாட்டில் உள்ள சட்ட நடைமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தையின் தாயின் அடையாளம் தெரியவில்லை, மேலும் குறித்த பெண்ணை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குழந்தை முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, ஓவத்தவெல வவுடாவைச் சேர்ந்த உள்ளூர் சாரதி ஒருவர் குழந்தையை பாதுகாப்பாக மீட்கப்படுவதை உறுதி செய்தார் என தெரிவிக்கப்படுகின்றது.