19.6 C
Scarborough

இன்றைய ராசிபலன் -19.07.2025

Must read

மேஷம்

அரசு விஷயங்கள் சாதகமாக செல்லும். உதாரணமாக அரசு சம்பந்தப்பட்ட டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். வாகனம் ஓட்டும்போது வாகனத்தின் முக்கிய ஆவணங்களை வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

வெளியூர் பயணம் தள்ளிப் போகும். விவசாயிகளுக்கு கேட்ட கடன் தொகை கிடைக்கும். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது வாய் நிதானம் தேவை. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். திருமண பேச்சு வார்த்தை சுபமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்

பணவரவில் தாமதம் இல்லை. நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் நிம்மதி கிடைக்கும்.பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும். பெரியவர்களின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கடகம்

குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கே சென்று அவர்களை உங்கள் வழியில் வரவழையுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. திருமணம். சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

சிம்மம்

பேச்சில் நிதானம் தேவை. குறிப்பாக அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். இரும்பு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். உடல் உற்சாகத்துடன் காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

பிள்ளைகள் நன்கு படிப்பர். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வேலைச்சுமை இருக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். திடீர் பணவரவு உண்டு. சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

விருச்சிகம்

வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

மாமனார் வழியில் நன்மைகள் உண்டு. தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உடல்நலம் சிறக்கும். வியாபாரம் செழிக்கும். அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து நிதானமுடன் செயல்படவும். பிரபலமானவர்களால் நன்மை. உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

மகரம்

அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

பணவரவு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித்தொகை வந்து சேரும். பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்

மீனம்

அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர் புதுப்புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article