தனது அமைச்சரவையின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு, கனேடிய பிரதமர், மார்க் கார்னி ஆதரவை தெரிவித்துள்ளார்.
சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரின் குடியேற்றத்திற்கு ஹரி ஆனந்தசங்கரி வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுவது தொடர்பிலேயே, பிரதமர், தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் குறித்த சூழ்நிலையில் வெளிப்படையாக இருந்தார் என்று குறிப்பிட்டுள்ள கார்னி, அவர் மீது தமக்கு நம்பிக்கை உள்ளதாக கார்னி கூறியுள்ளார்