ஹரி போட்டர் திரைப்படத்தில், ஹெர்மாயினி கிரேஞ்சர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகை எம்மா வாட்சன்.
10 வயது முதல் திரைப்படங்களில் நடித்தவரும் அவர், உலக முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தார்.கடந்த சில ஆண்டுகளாக திரையுலகிலிருந்து விலகிய அவர் தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயின்று வருகிறார்.
எம்மா வாட்சன் கடந்த வருடம் தனது சிற்றூர்ந்தில் வேகமாக சென்றதன் காரணமாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. க்ஸ்போர்ட் நகரத்தில் 48 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டிய வீதியில் 60 கிலோமீற்றர் வேகத்தில் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில், அந்நாட்டு நீதிமன்றத்தில் அவர்மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவருக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தில், எம்மா வாட்சனுக்கு 6 மாதங்களுக்கு வாகனம் செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 1,044 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.