சிறிய படகுகளினூடாக பிரித்தானியாவுக்கு வருகைத்தரும் புலம்பெயர்ந்தோர் சில வாரங்களுக்குள் பிரான்ஸுக்குத் திருப்பியனுப்படுவார்கள் என பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் லண்டனில் நேற்று வியாழக்கிழமை இந்த ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறார்கள்.
ஆரம்பத் திட்டம் குறைந்த எண்ணிக்கையிலான மக்களை மட்டுமே உள்ளடக்கியது என்றாலும், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு வருகைத்தருவோரை பிரான்ஸுக்குத் திருப்பி அனுப்ப முடியும் என்பதற்கான முன்னுதாரணம் பெரிய திருப்புமுனையொன்றாக இருக்கும் என பிரித்தானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
“ஒருவர் உள்ளே, ஒருவர் வெளியே” (one in, one out) என்ற இந்த ஒப்பந்தத்தின் கீழ், சிலர் பிரான்சுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள், என்றாலும் இங்கிலாந்தில் புகலிடம் கோருவதற்கு சட்டப்பூர்வமான உரிமைகோரல்கள் இருப்பதாகக் கருதப்படும் சம எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் வாரத்திற்கு 50 பேர் வரை திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.