அயர்லாந்தில் உள்ளூர் ரி20 போட்டியில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த் – வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடைபெற்றது.
இப்போட்டியில் அயர்லாந்தின் கர்டிஸ் காம்பெர் 5 பந்தில் 5 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே, கர்டிஸ் காம்பெர் கடந்த 2021இல் நெதர்லாந்துக்கு எதிரான ரி20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.