15.4 C
Scarborough

இன்றைய ராசிபலன் – 11.07.2025

Must read

மேஷம்

நெருங்கிய நண்பர்கள் தங்களிடம் கொண்டிருந்த மனக்கசப்பு நீங்கி நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். தொழிலில் அதிகமான பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். உடல் நலனில் அக்கறைத் தேவை.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

ரிஷபம்

தந்தையுடன் இணக்கமுடன் இருந்தால் தங்களுக்கு நன்மை செய்வார். காதலர்களின் அன்பு பலப்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒரு பகுதிக் கடனை அடைத்து விடுவீர்கள். தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

மிதுனம்

இன்று திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் தாங்கள் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்க வேண்டாம். மிருகசீரிடம் மற்றும் புனர்பூசம் நட்சத்திரகாரர்கள் தங்கள் சுபகாரியங்களை ஆரம்பிக்கலாம். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட நிறம் ரோஸ்

கடகம்

வெளிநபருக்கு உதவி செய்து பின்பு வருந்துவதை தவிர்க்கவும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு தாங்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் அதிகரித்து மேல் படிப்பிற்காக முயற்சி எடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

சிம்மம்

பணம் நாலாபக்கமிருந்தும் வரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிகளிடையே சண்டை வராமல் தடுக்க வாய் வார்த்தைகளை குறைப்பது நல்லது. வியாபாரிகள் கடின உழைப்பில் அதிக லாபம் ஈட்டுவார்கள். உறவினர்கள் நல்ல செய்தியுடன் வருவர்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

கன்னி

கலைஞர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் மகிழ்ச்சி தரும். பெரும் தொகை கைக்கு கிடைக்கும். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முதல் இடத்தை பிடிப்பர். நல்ல விளைச்சல் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

துலாம்

திடீர் பயணம் உற்சாகம் தரும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். பெண்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் மகிழ்வார்கள். இது நாள் வரை ஏமாற்றிக் கொண்டிருந்த நபர் உங்களிடம் கையும் களவுமாக சிக்கி விடுவார்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

விருச்சிகம்

விவசாயிகளுக்கு அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி புரிவர். காதலர்கள் திருமணத்துக்கு தயாராவர். பணியாளர்களின் நேர்மையைக் கண்டு நிர்வாகம் உயர் பதவியைத் தரும். உறவினரிடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

தனுசு

குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கலைஞர்களின் கனவு நனவாகும். வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். தெரியாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பைப் பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

மகரம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். மேலதிகாரிகள் பாராட்டுவர். வாங்கிய கடனை அடைத்து இன்புறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாக பொறுப்புகள் கூடும். மாணவர்கள் திட்டமிட்டு படிப்பர். சினிமா, நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

கும்பம்

செய்யும் தொழிலில் செழிப்பு உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய பட ஒப்பந்தம் கையெழுத்தாகும். தம்பதிகளிடையே அன்பு குறையாது. குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவுவர். தங்கள் துணையிடம் பெண்கள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சிலர் வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.

அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

மீனம்

திருமண முயற்சிகள் வெற்றி தரும். பெற்றோர்களது உடல் நலனை கவனிப்பது நல்லது. காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பண உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் பொன்னிறம்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article