15.3 C
Scarborough

10,000 வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கப் போகும் கல்லூரி வரையறைகள்!

Must read

கடந்த ஆண்டு தொடக்கம் நூற்றுக்கணக்கான திட்டங்கள் இரத்து செய்யப்பட்டதாலும் இடைநீக்கங்கள் செய்யப்பட்டதாலும், கிட்டத்தட்ட 10,000 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிநீக்கம் அல்லது வேலை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Ontario Public Service Employees Union தெரிவித்துள்ளது.

கல்லூரிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதால், இது Ontario வின் வரலாற்றில் மிகப்பெரிய வெகுஜன பணிநீக்கங்களில் ஒன்றாகும் என்று சுமார் 55,000 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் துணை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் கூறுகிறது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட தொழிற்சங்கத்திற்கும் College Employer Council இற்கும் இடையிலான ஒப்பந்தத்தினால் சர்வதேச மாணவர்கள் மீதான மத்திய அரசின் உச்சவரம்பு அனுமதி மற்றும் கல்வி வருமானத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. அத்துடன் 600 க்கும் மேற்பட்ட கல்லூரி திட்டங்களை இரத்து செய்தது அல்லது நிறுத்தி வைத்தது.

2023, September முதல் 2024, September வரை, Ontario வில் உள்ள 24 கல்லூரிகளில் 23 கல்லூரிகள் முதல் semester சர்வதேச மாணவர் அனுமதியில் 48 சதவீதம் குறைந்துள்ளதாக ஆவணம் காட்டுகிறது. June மாத நிலவரப்படி 19 கல்லூரிகள் தற்போதைய மற்றும் திட்டமிடப்பட்ட ஊழியர்களைக் குறைத்துள்ளதாகவும், மொத்தம் 8,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் குறைத்துள்ளதாகவும், சில கல்லூரிகள் தங்கள் பணிநீக்கங்களைப் புகாரளிக்காததால் தரவு முழுமையடையவில்லை என்றும் அது கூறுகிறது.

இந்த பணிநீக்கங்கள் மற்றும் திட்ட இடைநிறுத்தங்கள் தலைமுறை தலைமுறையாக தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும், கல்லூரி ஊழியர்கள் குறித்த வரையறைகளுக்கு எதிராகப் போராடத் தயாராகி வருவதாகவும் தொழிற்சங்கம் கூறுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article