சிம்பாப்வேக்கெதிரான இரண்டாவது டெஸ்டிலிருந்து அடிவயிற்றுப் பகுதி உபாதை காரணமாக தென்னாபிரிக்காவின் பதில் தலைவர் கேஷவ் மஹராஜ் விலகியுள்ளார்.
அந்தவகையில் தென்னாபிரிக்காவுக்கு சகலதுறைவீரர் வியான் முல்டர் தலைமை தாங்கவுள்ளார்.
மஹராஜ்ஜின் பிரதியீடாக செனுரன் முத்துசாமி பெயரிடப்பட்டதுடன், இரண்டாவது டெஸ்டுக்கான குழாமில் முன்னர் இணைவதாக இருந்த வேகப்பந்துவீச்சாளர் லுங்கி என்கிடி குழாமிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.