Canada Day இற்கு நாடு தயாராகி வரும் நிலையில், July 1 ஆந் தேதி உள்நாட்டில் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதால் நாட்டில் mobile பயனர்களுக்கு சற்று கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
1985 ஆம் ஆண்டு, Toronto நகர மண்டபத்திற்கு வெளியே உள்ள Nathan Phillips Square இல் முன்னாள் Toronto மேயர் Art Eggleton,10-pound எடையுள்ள cellular தொலைபேசியைப் பயன்படுத்தி அப்போதைய Montreal மேயரான Jean Drapeau இற்கு அழைப்பை ஏற்படுத்துவதைக் காண மக்கள் கூடியிருந்தனர்.
இந்த அழைப்பு Cantel என்ற வலையமைப்பில் நடந்தது, Rogers நிறுவனத்தின் இணைத்தயாரிப்பில் உருவான இந்த வலையமைப்பு அப்போது ஒரு நாளைக்கு சுமார் 100 அழைப்புகளைக் கையாண்டது. தற்போது, கனடா முழுவதும் Rogers wireless network தினமும் சுமார் 100 மில்லியன் அழைப்புகளைக் கையாளுகிறது.
ஆரம்பகால சாதனங்கள் தோளில் சுமந்து செல்லக்கூடிய அளவுக்கு அல்லது ஒரு வாகனத்தில் பொருத்தக்கூடிய அளவுக்கு பெரிதாக இருந்தன. அக்காலப்பகுதியில் pager களே அதிகம் பாவனையில் இருந்தது. அத்துடன் மிகவும் அரிதாக பாவனையில் இருந்த கட்டணத் தொலைபேசியை நோக்கி எங்காவது அலைய வேண்டியிருந்தது, இருப்பினும் அதை அணுக முடியாமல் பல முறை திரும்பிச் செல்ல வேண்டியும் ஏற்பட்டது.
கனடாவின் தொழில்நுட்ப மூலாதாரமாக மாறிய கடந்த 40 ஆண்டுகளைப் பற்றி சிந்திக்கும் போது, தான் பிரமிப்பில் இருப்பதாகக் Eggleton கூறினார். தற்போதைய இந்த smartphone களின் அனைத்து செயல்பாடுகளையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதைச் செய்யும் அளவுக்கு நான் தொழில்நுட்ப வல்லுநராகவும் இல்லை, ஆனால் அது தற்காலத்தில் அனைவரின் வாழ்க்கையையும் மாற்றிவிட்டதை நீங்கள் காணலாம் என்று அவர் மேலும் கூறினார்.