கனடாவின் பிரசித்தமான சுற்றுலா மையமான CN Tower-ல் பணியாற்றும் 250 ஊழியர்கள் லாக்அவுட் செய்யப்பட்டுள்ளதாக யூனிபோர் (Unifor) தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதில் கோபுரத்தின் முன் வளாகத்தில் பணியாற்றுவோர், தங்குமிடங்கள், உணவகம் மற்றும் வாகன தரிப்பிடங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அடங்குகின்றனர் என அந்த தொழிற் சங்கம் கூறுகிறது.
இதனால், அவதானிப்பு மாடிகள் (observation levels), எட்ஜ்வாக் (EdgeWalk) மற்றும் கடைகள் இயங்கினாலும், உணவகம் மற்றும் கபே என்பன மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
15 ஆண்டுகளாக ஓய்வூதியம் மேம்படுத்தப்படவில்லை என்றும், ஊதியங்கள் மதிப்பீட்டு உயர்வுகளை எட்டவில்லை என்றும், பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு தொடர்பான முக்கியமான கோரிக்கைகள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் யூனியன் குற்றம் சாட்டியுள்ளது.
தொழிற் சங்கத்தின் தலைவர் ஷான் ராமநாதன் (Shan Ramanathan) “இது வெறுமனே தொழிலாளர்களின் மீதான தாக்கோக அன்றி, டொரோண்டோவின் சுற்றுலா பொருளாதாரத்துக்கும் பெரிய பின்னடைவாக அமையும் என கூறுகிறார்.