உற்பத்தித் துறை மந்தமடைந்ததால் April மாதத்தில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.1 சதவீதம் குறைந்துள்ளதாக Statistics Canada தெரிவித்துள்ளது. May மாதத்திற்கான முன்கூட்டிய மதிப்பீடு மற்றொரு 0.1 சதவீத சரிவை சுட்டிக்காட்டுகிறது என்றும் Statistics Canada மேலும் கூறுகிறது.
பொருட்கள் உற்பத்தித்துறை 0.6 சதவீதம் சரிந்ததால் April மாதத்தில் பின்னடைவு ஏற்பட்டது, கிட்டத்தட்ட அனைத்து சரிவுகளுக்கும் உற்பத்தியே காரணமாக அமைந்தது.
உற்பத்தித் துறை April மாதத்தில் 1.9 சதவீதம் சரிந்தது, இது April 2021 இற்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக பதிவாகியுள்ளது.
நிலைத்திருக்கும் பொருட்களின் உற்பத்தி April மாதத்தில் 2.2 சதவீதம் சரிந்தது, அதே நேரத்தில் நிலைத்திருக்கும் பொருட்கள் அல்லாத பொருட்களின் உற்பத்தி 1.6 சதவீதம் சரிந்தது. இதற்கிடையில், சேவைகள் உற்பத்தி துறை இந்த மாதத்தில் 0.1 சதவீதம் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.