15.1 C
Scarborough

பதற்றம் நிலவும் நாடுகளிலிருந்து வெளியேறும் கனேடியர்களுக்கு உதவுகின்றது கனடா!

Must read

செவ்வாயன்று Ottawa வில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட விமானத்தில் ஒரு தொகுதி கனேடியர்கள் மத்திய கிழக்கிலிருந்து கனடாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கிலிருந்து தமது குடிமக்களை வெளியேற்ற கனடாவும் உதவி வருவதாக வெளியுறவு அமைச்சர் Anita Anand கூறுகின்ற நிலையில், உதவி கேட்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது கனேடியர்களின் எண்ணிக்கை குறைவானது என்று குறிப்பிடுகின்றார்.

புதன்கிழமை மக்களைச் அழைத்துவரும் நோக்கத்துடன், Israel மற்றும் மேற்குக் கரையிலிருந்து Jordan க்குச் செல்லும் கனேடியர்களுக்கு உதவ அதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த வெளியுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.

கடந்த வாரம் Israel மற்றும் Iran இற்கு இடையே ஏற்பட்ட போரைத் தொடர்ந்து, Global Affairs Canada பிராந்தியத்தில் கனடா தனது தூதரக உதவியை அதிகரித்துள்ளது. இருப்பினும் நேச நாடுகளை விடவும் குறைவான உதவியையே வழங்குவதாக கனடா மீது குற்றம் சாட்டப்படுகின்றது.

கடந்த வாரத்தில் Israel, Iran மற்றும் மேற்குக் கரையிலிருந்து வெளியேறிய 600க்கும் மேற்பட்ட கனேடியர்களுக்கு உதவியுள்ளதாக வெளியுறவுத்துறை கூறுகிறது. 2012 முதல் கனடா Iran இல் எதுவித இராஜதந்திர உறவுகளையும் கொண்டிருக்காத நிலையில் Turkey, Armenia அல்லது Azerbaijan போன்ற நாடுகளில் இருந்து வெளியேறுபவர்களுக்காக கனடா Iran எல்லைப் பகுதிக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, Israel இல் இருந்து வெளியேறுவதற்காக 6,100 பேரும், Iran இல் இருந்தும் 6,100 பேரும், மேற்குக் கரையிலிருந்து வெளியேறுவதற்காக 450 பேரும், Qatar இல் இருந்து 7,100 பேர் மற்றும் Iraq இல் இருந்து வெளியேற ஆயிரம் பேரும் Global Affairs Canada வில் பதிவு செய்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article