15.4 C
Scarborough

ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி!

Must read

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

தற்போதைய நிலைமை தொடர்பில் ஈரான் ஜனாதிபதியிடம் பேசியதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்மை மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டதாக தெரிவித்த அவர் பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கும், பதற்றத்தை உடனடியாகக் குறைப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தினேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ஈரானில் உள்ள ஃபோர்டோ மற்றும் பிற அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா இன்று அதிகாலை குண்டு தாக்குதல் மேற்கொண்டது.

ஈரான் சமாதானத்திற்கு இணங்காவிட்டால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

ஆனாலும்  ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை அமெரிக்காவின் நியூயோர்க் உள்ளிட்ட நகரங்களுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வொஷிங்டன் போன்ற முக்கிய நகரங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article