கனடாவின் வௌிநாட்டு உறவுகளை திறம்பட மீட்டெடுக்க விரும்புவதாக வௌிவிவகார அமைச்சர் அனீத்தா ஆனந்த் (Anita Anand) தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் தற்போது காணப்படும் சர்வதேச எதிர்ப்பு நடைமுறைக்கு மத்தியிலும் அதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதன்படி, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசாங்கம் வௌிநாட்டு உறவுகளை பாதுகாப்பதாக உறுதியளித்துள்ள நிலையில், பிரஸல்ஸ் (Brussels) நகரில் திங்கள் அன்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாதுகாப்பு ஒப்பந்தம் கைசாத்திடப்படவுள்ளது. பின்னர் நெதர்லாந்தில் (Netherlands) நடைபெறவுள்ள அரச தலைவர் மாநாட்டிலும் பிரதமர் கார்னி கலந்துகொள்ள உள்ளார்.
இந்தியா மற்றும் கனடா இடையே உறவுகளை மீட்டமைக்க முயற்சி நடைபெறுகிறது. ஆனால் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொலைக்கேடு தொடர்பான குற்றச்சாட்டுகள், இருநாடுகளின் உறவை சிக்கலாக்கியுள்ளன. ஆனாலும் அனந்த், ஜனநாயக அடிப்படைகள் மற்றும் சட்ட அமைப்புகளை மதிப்பதாக கூறினார்.
அதற்காக “நாம் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ள. நேரத்தை வீணாக்கக்கூடாது.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.