கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கவார்த்தா லேக்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற படகு விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் டொரொன்டோ நகரிலிருந்து சுமார் 155 கிலோமீட்டர்கள் வடகிழக்கில் உள்ள ஸ்டர்ஜன் ஏரியில் இடம்பெற்றுள்ளது.கனடா வீட்டு உபயோகப் பொருட்கள்
மூன்று ஆண்கள் பயணித்திருந்த ஒரு கனோவ் (இழுவை படகு) கவிழ்ந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அந்த மூவரில் ஒருவர் மட்டுமே கரைக்கு எட்டியதாகவும், மற்ற இருவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துச் சமயத்தில் படகில் உயிர்காப்புப் பெல்ட்கள் எதுவும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில், ஒன்றாரியோ கடற்படை பிரிவு, கவார்த்தா லேக்ஸ் நகர தீயணைப்பு மற்றும் அவசர சேவை பிரிவுகள் மற்றும் வான் கண்காணிப்பு பிரிவும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய மரணங்களைத் தவிர்க்க, படகில் பயணிப்போர், தனிப்பட்ட நீர்மிதப்புப் பெல்ட்கள் அல்லது உயிர்காப்புப் பெல்ட்கள் அணிய வேண்டிய அவசியத்தை ஒன்றாரியோ காவல்துறை வலியுறுத்தியுள்ளது.