கனடாவில் இந்திய மாணவர் சேர்க்கை 31 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் அதிகரித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையால் வீட்டுவசதி நெருக்கடி, சுகாதாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
எனவே கடந்த 2023ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் மார்க் கெர்னி தலைமையிலான லிபரல் கட்சி அண்மையில் ஆட்சி பொறுப்பேற்றது.
இதனையடுத்து வருகிற 2028-ம் ஆண்டில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்ற இலக்கை பிரதமர் மார்க் கெர்னி அறிவித்தார்.
இதற்காக விசா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் இந்த ஆண்டு இதுவரை 30 ஆயிரத்து 640 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 31 சதவீதம் குறைவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.