16.1 C
Scarborough

இஸ்ரேலுக்கு உதவியதால் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு தலையிடி!

Must read

காஸா மீது தாக்குதல் நடந்த இஸ்ரேல் அரசுக்கு தங்கள் நிறுவனத்தின் ஏ.ஐ மூலம் உதவி செய்வதை மைக்ரோசொப்ட் நிறுவனம் சமீபத்தில் ஒப்புக்கொண்டது.

இந்நிலையில் காஸாவில் இனப்படுகொலையை குறித்து கேள்வி எழுப்பி மைக்ரோசொப்ட் ஊழியர் ஒருவர் தலைமை நிர்வாக அதிகாரியின் உரையை இடைமறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உரையின் போது, மைக்ரோசொப்டின் Azure ஹார்டுவேர் சிஸ்டம்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் பொறியியலாளரான ஜோ லோபஸ் அவரை இடைமறித்து கேள்வி எழுப்பத் தொடங்கினார்.

மைக்ரோசொப்ட் பலஸ்தீனர்களை எப்படிக் கொல்கிறது என்பதைக் காட்ட முடியுமா? இஸ்ரேலிய போர்க்குற்றங்களை Azure எவ்வாறு ஆதரிக்கிறது என்பதைக் காட்ட முடியுமா? என்று அவர் கேள்வி கேட்டார்.

இதைத்தொடர்ந்து பாதுகாப்புப் அதிகாரிகள் லோபஸை அங்கிருந்து அகற்றினர். நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், மைக்ரோசொப்ட் இஸ்ரேல் பலஸ்தீன மக்களை இனரீதியாக அழிக்க உதவும் போது அமைதியாக இருக்க முடியாது என்று லோபஸ் கூறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article