கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையில், சுற்றுலா பயணகளை ஏற்றிச் சென்ற விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
சீப்ளேன் ரக விமானமே இவ்வாறு கடலில் விழுந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் பயணித்த மூவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சன்ஷைன் கோஸ்ட் பகுதியில் உள்ள ரெஃப்யூஜ் கோவ் அருகே மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விக்டோரியாவிலுள்ள முக்கிய மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (JRCC) இந்த விபத்துக்கான அழைப்பைப் பெற்றதும், “Cape Caution” எனும் கடற்படைக் கப்பலும், உள்ளாட்சி மீட்பு படகும் அனுப்பப்பட்டன. இந்த விமானத்தில் மூன்று பேர் பயணித்துள்ளனர்.
விமானம் கடலில் விழுந்தவுடன், அவர்கள் மூவரும் வெளியேற முடிந்தது,” என்று JRCC பேச்சாளர் கேப்டன் பெட்ரம் மொஹ்யெடின் கூறினார்.
விபத்து நேரத்தில் அருகில் இருந்த பல தனியார் படகுகளில் இருந்தவர்கள், பயணிகளை மீட்க விரைவாக களமிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.