15.4 C
Scarborough

கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழர்!

Must read

பிரான்சின் பெரிஸில் நடந்த மோதல் தொடர்பாக கனடாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலின் தலைவர் என நம்பப்படும் இலங்கை தமிழர் ஒருவரை பிரான்சுக்கு நாடு கடத்துமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் “பிரசன்னா நல்லலிங்கம்” என்ற அஜந்தன் சுப்பிரமணியம்’ என்பவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கனடாவின் டொராண்டோவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பிரான்சில் நடந்த கொலை

இவர் 2021 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தப்பிச் சென்று அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடாவில் சட்டவிரோதமாக வசித்து வந்துள்ள நிலையில், அந்த நாட்டில் மனித கொலைகள் உட்பட பல குற்றங்களுக்காக அவர் தேடப்பட்டவர் என கூறப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு பிரான்சில் நடந்த ஒரு கொலை வழக்கில் சந்தேக நபரான இவர், கடந்த டிசம்பரில் டொராண்டோவில் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, அந்த சம்பவம் தொடர்பாக ‘பிரசன்னா நல்லலிங்கம்’ என்ற இலங்கையரை பிரான்சுக்கு நாடு கடத்துமாறு கனடாவின் ஒன்ராறியோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article