17.6 C
Scarborough

கனடாவில் வீடு விற்பனையில் சரிவு!

Must read

கனடாவின் வீடு விற்பனை துறை 2022 ஆம் ஆண்டில் இருந்ததை போன்ற வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக Canadian Real Estate Association கூறுகிறது. ஏப்ரல் மாதம் கனடா முழுவதும் மொத்தம் 44,300 குடியிருப்பு சொத்துக்கள் கைமாறின, இது ஏப்ரல், 2024 இல் 49,135 ஆக இருந்தது. இதனடிப்படையில் வீட்டு விற்பனை கடந்த ஆண்டை விட 9.8 சதவீதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேநேரம் வீடு விற்பனை துறை கனடாவில் சரிந்து விடும் என அநேகமானோர் அச்சப்படுகின்றனர். இப்போது ஒரு வீட்டை வாங்கினால், வீட்டின் மதிப்பு குறைந்துவிட்டால் என்ன செய்வது? என்று மக்கள் அச்சப்படுகின்றனர் என கனடாவின் வீடு விற்பனை முகவர்கள் கூறுகின்றனர். எனினும், ஏப்ரல் மாத இறுதியில் கனடா முழுவதும் 183,000 சொத்துக்கள் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளன இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 14.3 சதவீதம் அதிகமாகும்.

எதிர்காலத்தில் ஒரு கடினமான பொருளாதாரத் தடங்கலுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வரும் நிலையில் தங்கள் வீடுகளை விற்க முயற்சிக்கும் சராசரி எண்ணிக்கையிலான மக்கள் தொகை சடுதியாக அதிகரித்தால் எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படும். இது பல தசாப்தங்களாக கனடாவில் நிகழாத சம்பவம் என்று CREA யின் மூத்த பொருளாதார நிபுணர் சுஹான்  கெத்கார்ட் கூறினார்.

இந்தநிலையில் வன்கூவரைத் தளமாகக் கொண்ட வீடு விற்பனை முகவர்களின் தகவலுக்கமைய, அங்கு சந்தையில் விநியோகம் தேங்கி வருவதாகவும், தற்போதைய பொருளாதார சூழலில் அது அவ்வளவு விரைவாக விற்பனையாக சாத்தியமில்லை என்றும் கூறுகின்றனர்.

கனடாவின் ஸ்திரமற்ற பொருளாதார தன்மையானது உண்மையாக வீடு வாங்குபவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் குறைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கனடாவின் வீடு விற்பனை தற்போதைய மந்த நிலையிலிருந்து மீண்டு ஆண்டின் பிற்பகுதியில் வளர்ச்சியை பதிவு செய்யும் என புள்ளிவிபரங்கள் மூலம் எதிர்வு கூறப்படுகின்றன.

இருப்பினும், பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஒன்ரோறியோவில் மிகவும் தளர்வான விநியோகம், தேவை சமநிலைகள் காணப்படுவதால், கனடாவின் சராசரி வீட்டு விற்பனை வளர்ச்சியானது இவ்வாண்டின் பெரும்பகுதி பின்தங்கியதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article