19.6 C
Scarborough

தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி கனடா வரலாற்றில் முக்கிய தருணம்!

Must read

கனடா பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறக்கப்பட்டுள்ளமை எங்கள் கூட்டு வரலாற்றில் முக்கியமான ஒரு தருணமாகும் என கனடாவின் நீதியமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- இந்த நினைவுத்தூபி இலங்கையில் அரசாங்கத்தினால் தமிழர்களிற்கு எதிரான இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நினைவுச்சின்னமாக விளங்குகின்றது.

உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் வலிமை மற்றும் மீள் எழுச்சி தன்மையை இது கௌரவிக்கின்றது.அவர்களின் அர்ப்பணிப்பே இந்த நினைவுத்தூபி உருவாகுவதற்கான காரணம்.

நான் கனடா பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் ,கனடா தமிழர் தேசிய பேரவை பிரம்டன் தமிழ் சங்கம் ஆகிய தரப்பினருக்கும் எங்கள் கதைகள் ஒருபோதும் மறக்கப்படாமலிருப்பதற்காக போராடியவர்களிற்கும் எனது நன்றியை தெரிவித்து;க்கொள்ள விரும்புகின்றேன்.

நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக குரல்கொடுக்கும் அதேவேளை ஐக்கியப்பட்டவர்களாக வலிமையானவர்களாக விளங்குவோம்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article