15.4 C
Scarborough

புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளை நினைவுகூர அறைகூவல்!

Must read

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட நாளை நினைவுகூருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும்.அதேபோல ஜனாதிபதியும் நினைவுகூர வேண்டும் – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

“ மே 9 ஆம் திகதியே நாசிச வாதம் மற்றும் பாஷிசவாதம் என்பன தோற்கடிக்கப்பட்ட நாளாகும். அதாவது 2 ஆவது உலகப்போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாளாகும். எனவே, 2 ஆம் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக உயிர் தியாகம் செய்த படையினரை நினைவுகூரவேண்டும்.

இலங்கையில் பாஷிசவாதத்தை தோற்கடித்த நாள் இன்னும் 8 நாட்களில் வருகின்றது. புலிகள் அமைப்பு என நாம் கூறும் தரப்பும் நவ நாசிசவாத மற்றும் பாஷிசவாத அமைப்பாகும். ” எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வியட்நாம் விஜயத்தின்போது படைவீரர்களின் நினைவு தூபியில் மலரஞ்சலி செலுத்தினார். எனவே, இலங்கையில் பாஷிசவாதம் தோற்கடிக்கப்பட்ட நாளையும் சிறப்பாக நினைவுகூர வேண்டும். இன்னும் 8 நாட்களில் அதற்கான நாள் வருகின்றது. தமது கடமையை அந்நாளில் நிறைவேற்ற நாட்டு மக்களும் அணிதிரள வேண்டும்.” -எனவும் அவர் கூறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article