15.4 C
Scarborough

100 கோடி வசூலை கடந்தது ‘ரெட்ரோ’

Must read

சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தின் வசூல் ரூ.100 கோடியை கடந்துவிட்டதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் உற்சாகமாகி இருக்கிறார்கள். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இப்படத்தின் வசூலுக்கு குறைவில்லை என்பதே இந்த உற்சாகத்துக்கு காரணம்.

2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்த படம்‘ரெட்ரோ’. சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்ட இப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரிதாக எடுபடவில்லை என்றாலும், வசூல் ரீதியாக குறை வைக்கவில்லை. இப்படத்தினை பார்த்துவிட்டு ரஜினியும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article