பாராளுமன்றத்தில் பியர் அங்கம் வகிக்காத காரணத்தால், கொன்சர்வேடிவ் கட்சியை நாடாளுமன்றத்தில் வழிநடத்துவதற்காக கட்சியின் நாடாளுமன்றக் குழு ஆண்ட்ரூ ஸ்கீரை தற்காலிக தலைவராக தேர்வு செய்துள்ளது.
சஸ்காட்செவனின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கட்சித் தலைவருமான இவர், மே 26 ஆம் திகதிக்கு பின்னர் தொடங்கும் அமர்வின் போது எதிர்கட்சி தலைவராக கடமைகளை பொறுப்பேற்று செயற்படவுள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக கார்ல்டன் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய பியர் பொலிவர் கடந்தவாரம் பொதுத்தேர்தலின் போது தோல்வியடைந்தார்.
பியர் பொலிவர் இடைத்தேர்தலொன்றின் மூலம் அல்பெர்டா தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்தில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கட்சித் தலைவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட டேமியன் குரேக் பதவி விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.