கிறீன் கட்சியின் இணைத் தலைவரான ஜோனாதன் பெட்னௌல்ட், கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதன்படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் எனது இராஜினாமாவை சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.
மோதல் பகுதிகளில் 14 ஆண்டுகள் பணியாற்றிய மனித உரிமைகள் புலனாய்வாளர், ஆர்வலர் மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளரான பெட்னௌல்ட், பெப்ரவரியில் எலிசபெத் மேயுடன் கிறீன் கட்சியின் இணைத் தலைவராக இணைந்தார்.
தனக்குச் சொந்தமான ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் இடம் கிடைக்காத்தால், பெட்னௌல்ட் மாண்ட்ரீல் தீவில் உள்ள அவுட்ரெமாண்டில் இம்முறை அவர் போட்டியிட்டார். தேர்தலில் அவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். லிபரல் வேட்பாளர் ரேச்சல் பண்டாயன் 26,024 வாக்குகளுடன் அந்த இடத்தை வென்றார். அந்த்தொகுதியில் பெட்னௌல்ட் 4,539 வாக்குகளைப் மட்டுமே பெற்றார்.
இது கிறீன் கட்சிக்காக போட்டியிட்டு பெட்னௌலின் பெற்ற இரண்டாவது தோல்வியாகும். 2023 இடைத்தேர்தலில், அவர் அண்டை நாடான நோட்ரே- டேம்-டி-கிரேஸ் – வெஸ்ட்மவுண்டில் போட்டியிடுவதற்காக முயற்சித்தார், ஆனால் தோல்வியடைந்தார்.