காஷ்மீரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுடன் இராஜதந்திர உறவை இடைநிறுத்த இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இது தொடர்பில் கூறியுள்ளதாவது,
புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் உள்ள பாதுகாப்பு/இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஆலோசகர்கள் இராஜதந்திர சிறப்புரிமை அல்லாதவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற ஒரு வாரம் அவகாசம் உள்ளது.
சார்க் விசா விலக்கு திட்டம் (SVES) விசாக்களின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்த காலத்தில் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு SVES விசாக்களும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும்.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற உத்தரவு
பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது
பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள், மே 1ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும்