கனடா- அமெரிக்க எல்லையில் வெற்றிகள் ஏற்பட்டாலும் கனடா மீதான வரிகள் குறித்து புதிய தகவல்கள் எதனையும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிடவில்லை என்றார். அத்துடன் எல்லையின் கட்டுப்பாடுகள் மிகப்பெரிய பலனைத்தருவதாகவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செவ்வாயன்று கூறுகையில்
எல்லை தாண்டிய சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவையே கனடா மீது ட்ரம்ப் அதிக வரிகளை விதிக்க காரணமாக அமைந்தது. இவற்றை தடுப்பதற்கு கனடாவும் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தது. இதன் விளைவாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு தரவுகளின் அடிப்படையில் வடக்கு எல்லையில் ஒரு சிறிய அளவிலான fentanyl மட்டுமே கைப்பற்றப்பட்டிருந்தது. ஆயினும் இவற்றைக் கருத்திற்கொண்டு ட்ரம்ப் கனடா மீது அதிக வரிகள் விதிப்பதை நிறுத்த வாய்ப்பில்லை என கரோலின் லீவிட் கூறினார்.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் ட்ரம்ப் உலகத்துடன் தனது வர்த்தகப் போரை தொடங்கியதிலிருந்து சந்தைகள் கொந்தளிப்பில் உள்ளன. அவர் பரஸ்பர வரிகளை அமுல்படுத்தினார் ஆனால் சில மணிநேரங்களுக்குப் பின்னர் வர்த்தக ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்த 90 நாள் இடைநிறுத்தத்தை ஏற்படுத்துவதன் மூலம் மிகவும் அழிவுகரமான வரிகளைத் திரும்பப் பெற்றார். அமெரிக்கா இன்னும் பெரும்பாலான நாடுகளுக்கு 10 சதவீத வரியையும், வாகனம், இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரிகளையும் விதித்து வருகிறது.
கடந்த மாத இறுதியில் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மார்க் கார்னி கனடாவின் தேர்தலுக்குப் பின்னர் ஒரு புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஜனாதிபதி ஒப்புக்கொண்டதாகக் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.