கனடாவில் பொலிஸ் அதிகாரியொருவரின் ட்ரேஸர் கருவியை பறிக்க முற்பட்ட ஒருவருக்கு 300 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு்ள்ளது.
மார்டின் மூர் என்ற நபரொருவரே இவ்வாறு பொலிஸாரின் கருவியை பறிக்க முற்பட்டாகவும் அவர் 31 வயது மதிக்கத்தக்கவர் என்றும் கூறப்படுகிறது.
குறித்த நபர் மீது பொலிஸாரின் ஆயுதங்களை பறித்தல், கடன் கட்டைகளை பயன்படுத்தி போலி பரிசு சீட்டுக்களை கொள்வனவு செய்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் இவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த நபருக்கு 150 நாட்கள் சிறைத் தண்டனை போதுமானது என வலியுறுத்தியதை கடுமையாக விமர்ச்சித்த நீதிபதி, அவருக்கு 300 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் அவர் மீது ஓராண்டு கால கண்பாணிப்பு பரோலும் விதிக்கப்பட்டது.
இவர் போதைப்பொருளுக்கு அதிகளவில் அடிமையானவர் என்ற விடயமும் நீதிமன்ற விசாரணைகளின் போது தெரியவந்தது.