தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம்.
சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது. சூரிய பகவான், மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் தனது பயணத்தை நிறைவு செய்வதை ஒரு ஆண்டு ஆகும்.
அதன்படி, நாளை தமிழ் புத்தாண்டை பாரம்பரிய முறையில் கொண்டாட நம் முன்னோர் சில வழி முறைகளை கடைபிடித்து வைத்துள்ளனர்.
அதாவது தமிழ் புத்தாண்டை கொண்டாட முதல் நாளே அனைத்தையும் தயார் செய்து விட வேண்டும். வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் சுவாமி படங்களை துடைத்து வைத்து விட வேண்டும்.
விசுவாவசு வருடம் சித்திரை புத்தாண்டு தினத்தில் அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:30 மணி அளவில் நுழையும் பொழுது பிறக்க இருக்கிறது.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நாளை அதிகாலை 2 மணி 29 நிமிடத்துக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, நாளை அதிகாலை 3 மணி 21 நிமிடத்துக்கும் புத்தாண்டு பிறக்கிறது.
மருத்துநீர் வைப்பதற்கான புண்ணிய காலம் இன்று இரவு 11. 21 முதல் நாளை காலை 7.21 வரை உள்ளது.
கைவிசேடம் பரிமாறுவதற்கான சுபநேரமாகக் நாளை காலை 6.05 முதல் காலை 7.10 வரையும், அதேநாளில் காலை 9.05 முதல் இரவு 9.56 வரையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தாண்டில் சிவப்பு நிறப்பட்டாடை அல்லது சிவப்புக்கரை வைத்த வெள்ளை புது வஸ்திரம் அணிய வேண்டும்.
விசுவாவசு வருடம் சூரிய ஆதிக்கத்தில் இருப்பதால் சிவதலங்களுக்கு செல்லவும்.
இலையில் அறுசுவை உணவுகள் நிறைந்திருக்க வேண்டும். நெய் வேத்தியமாக பால் சார்ந்த இனிப்புகளை வைக்கலாம். ஒரு வருடம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
காலையில் 5.30 மணிக்கு எழுந்துவிட்டு 5.45 மணி முதல் 6 மணிக்கு உள்ளாக சூரிய வணக்கம் செலுத்தவும்.