14.8 C
Scarborough

இத்தாலிய மாபியாவை குறிவைத்து தேடுதல் வேட்டை – 7 பேர் கைது!

Must read

கனடாவில் அதிகாரிகள் நடத்திய மாஃபியா வேட்டையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தாலிய மாஃபியாவை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு பெரிய நடவடிக்கையில், மாண்ட்ரீல் பொலிசார்(Montreal Police) (SPVM) புதன்கிழமை அதிகாலை ஏழு பேரை கைது செய்தனர்.

இந்த ஒருங்கிணைந்த முயற்சியில், 34 முதல் 59 வயதுக்குட்பட்ட ஆறு ஆண்களும், 44 வயதுடைய ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

மாண்ட்ரீலின் லாசல்லே(Montreal’s LaSalle) மற்றும் வெர்டன் வட்டாரங்களிலும், தெற்கு கரையில் அமைந்துள்ள ப்ரோசார்டிலும் நடத்தப்பட்ட தொடர்ச்சியான இலக்கு வைக்கப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கை, மே மற்றும் ஜனவரி 2024 இல் நடத்தப்பட்ட முந்தைய வெற்றிகரமான சோதனைகளின் தொடர்ச்சியாகும்.

அந்த சோதனைகளில் கணிசமான அளவு போதைப்பொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் பெரும் தொகையிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 2023 இல் தொடங்கி பல கட்டங்களாக நடைபெற்ற ‘ப்ராஜெக்ட் அமெரிக்கானோ’வில் இதுவரை மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என SPVM இன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் தலைவர் பிரான்சிஸ் ரெனால்ட் தெரிவித்துள்ளார்.

இதுவரை, ப்ராஜெக்ட் அமெரிக்கானோவில் 32 கிலோகிராம் கொக்கைன், 4 கிலோகிராம் கிரிஸ்டல் மெத், $2.2 மில்லியன் ரொக்கம் மற்றும் 12 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸ் படை தெரிவித்துள்ளது.

புதன்கிழமை அதிகாலை நடவடிக்கையில் சுமார் 40 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்று பிற்பகலில் மாண்ட்ரீல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article