15.1 C
Scarborough

இந்திய பிரதமருக்கு ரஷ்யா அழைப்பு

Must read

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி ஜேர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மே 9 அன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தினம் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

மே 9, 1945 அன்று ஜேர்மனி, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியனிடம் சரணடைந்ததை நினைவுகூறும் வகையிலான இந்த வெற்றி தின அணிவகுப்பு, ரஷ்யாவின் மிக முக்கியமான வருடாந்த கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில் இந்த அணிவகுப்புக்கு அழைப்புக் கடிதத்தை இந்திய பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article