கனடாவில் சில ஆசிரியர்களால் பாடசாலை மாணவர்கள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 2013 ஆம் ஆண்டு மாணவியொருவரை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் மணிடோபா பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு, ஆறு மாத சிறைத் தண்டனை மற்றும் மூன்று வருட கண்காணிப்பு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்த்து.
இந்நிலையில் அவருக்கான ஆசிரியர் சான்றிதழல் 2017 ஆம் ஆண்டு வரையில் செயற்பாட்டில் இருந்திருப்பது தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்பே எடுக்க முடியுமென மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனாலேயே குறித்த ஆசியிரின் சான்றிதழை இரத்துச் செய்ய முடியாமல் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இவரது சான்றிதழ் 2016 ஆம் ஆண்டு ஒன்றோரியோவில் இரத்துச் செய்யப்பட்டிருந்த்து. அல்பர்ட்டாவில் 2019 ஆம் ஆண்டு நிறைவு செய்யப்பட்டிருந்தது. மணிடோபாவில் 2017 ஆம் ஆண்டில் அமுலாகும் வரையில் இரத்துச் செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான கால தாமதம் சிறுவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்று பெற்றோர்கள் மத்தியில் இந்தச் சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தற்காலிகமாக இவ்வாறானவர்களின் சான்றிதழ்களை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெ பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அதன் பின்னே அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அல்லது தண்டனை வழங்குவதா என்பதை தீர்மானிக்க வேண்டுமென, Educated child exploitation canada அமைப்பின் நிருவாகி ஏன் மேரி ரொபின்ஸன் தெரிவித்தார்.
மேலும் மாணவர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்க வேண்டுமெனவும்,பெடறல் அரசாங்கத்தில் ஒருங்கிணைந்த ஆசிரியர் பதிவேடு இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவ்வாறு இருக்கும் பட்சத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் போது அனைத்து மாகாணங்களிலும் அவர்களின் அனுமதிகளை இரத்துச் செய்ய முடியும் என்பதையும் இல்லாவிட்டால் அவர்கள் மாற்று மாநிலங்களில் சிறுவர்கள் சார்ந்த கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் பயிற்றுவிப்பு பணிகளில் ஈடுபட வாய்ப்பி கிட்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.