15.4 C
Scarborough

கனடாவில் கிருஷ்ணர் கோவில் மீது தாக்குதல்

Must read

கனடாவில் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோவில் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை அந்நாட்டு பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடந்ததாக கூறப்படும் குறித்த சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆரய்ந்ததில் 2 நபர்கள் முதலில் அப்பகுதியில் இருந்த PUBக்கு சென்றதும் பின் அங்கிருந்து வெளிவந்து கோவிலின் முகப்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

அந்த நபர்கள் Hoodie அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை கனடா பொலிஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால், கனடாவில் இந்து வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்துக்கு இந்து கனேடிய அறக்கட்டளையும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article