13.8 C
Scarborough

ஆர்யாவுக்கு லிபரல் கட்சி தடை விதித்து ஏன்! – உண்மை காரணம் அம்பலம்

Must read

இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை

கனடாவில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரா ஆர்யா தேர்தலில் போட்டியிட ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தடை விதித்தது.

எதனால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது என்பதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமலே அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டது.

தடை விதிக்கப்பட்டது இதனால்தான்

இந்நிலையில், சந்திரா ஆர்யா தேர்தலில் போட்டியிட ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தடை விதித்தது ஏன் என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

ஆர்யா இந்திய அரசுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுவதாலேயே தேர்தலில் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Globe and Mail என்னும் கனேடிய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஆர்யா கடந்த ஆண்டு ஆகத்து மாதம் இந்தியா சென்றதாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், ஆர்யா தனது பயணம் குறித்து கனடா அரசுக்கு தெரியப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article