எகிப்து கடற்கரையில் 44 பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
நீர்மூழ்கிக் கப்பலில் ஆபத்தில் பயணித்துக் கொண்டிருப்பதை அறிந்து எச்சரிக்கை எழுப்பப்பட்டதையடுத்து, எகிப்திய அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளின் மையமான ஹுர்காடா அருகே கரைக்கு பல அம்பியூலன்ஸ்களை அனுப்பியுள்ளனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 44 பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் நீர்மூழ்கிக் கப்பல், இன்று (27) காலை பயணித்துக்கொண்டிருந்தபோது மூழ்கியது.