இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 48. ஒரு மாதத்திற்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் காலமானார்.
1999 ஆம் ஆண்டு பாதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் படத்தின் மூலமாக மனோஜ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரியா சென் நடித்து இருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்த படத்தில் அனைத்து பாடல்களும் மெகா ஹிட்டாக அமைந்தது.
இதை தொடர்ந்து கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜூனா உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார். அதன்பின் விருமன், மாநாடு உள்ளிட்ட படங்களிலும் மனோஜ் நடித்து இருந்தார் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சமீபத்தில் இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய முதல் படம் இதுவாகும். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.