பட்டலந்த என்பது மற்றுமொரு காட்சி மாத்திரமே என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
ஹிரு செய்திப் பிரிவுக்கு அவர் வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் தாங்கள் எண்ணுவது என்ன? அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் என நினைக்கிறீர்களா? உள்ளிட்ட கேள்விகளுக்கு சந்திம வீரக்கொடி பதிலளித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி பதிலளிக்கையில்,
“இது ஒரு அரசியல் அத்தியாயம். எதிர்பாராமல் விழுந்த பந்துக்குத் தான் இவர்கள் துடுப்பாட முயற்சிக்கிறார்கள். இந்தப் பட்டலந்த அறிக்கையைப் பற்றிப் பேசுகையில், இது 1998 இல் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையை 1998 ஆம் ஆண்டு முன்வைக்கவில்லை.
2001 ஆம் ஆண்டு சந்திரிக்கா தோல்வியடைந்து மீண்டும் அதிகாரத்தைப் பெற்று ஆட்சிக்கு வந்தார். இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியில் ஜனாதிபதி உள்ளிட்ட நான்கு அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னரே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. சுமார் நாற்பது உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில்.
அந்த சந்தர்ப்பத்தில் மக்கள் விடுதலை முன்னணிக்கு பெரும் அதிகாரம் இருந்தது. எனினும் அந்த பட்டலந்த அறிக்கையைச் செயற்படுத்தி தமது சகோதரர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரவில்லை. அதன் பின்னர் 2004 ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார்.
அதன் போது மக்கள் விடுதலை முன்னணியில் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் வழங்கிய ஆதரவிலேயே அவர் ஜனாதிபதியானார். அந்தக் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பட்டலந்தவுடன் தொடர்புடையவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு யாரும் கூறவில்லை.” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி பதிலளித்தார்.