2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு விவாதம் இன்று நடைபெற்றது.
பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு 114 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பாதீட்டுக்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் கிடைத்தன.
நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, கடந்த மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பாதீடு உரையைச் சமர்ப்பித்தார்.
அதன் பின்னரான பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு 109 பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் கிடைத்தன.
அதன் பின்னர், குழுநிலை விவாதம் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகியது. நேற்றும் இன்றும் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செலவினத் தலைப்புகள் விவாதிக்கப்பட்டன.