17.6 C
Scarborough

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம்- எம்.ஏ.சுமந்திரன்!

Must read

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் நேற்று யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வளவு காலமும் தாங்கள் மட்டுமே புனிதமானவர்கள் என்று தேர்தலில் போட்டி போட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் நிலைமையை உணர்ந்து ஒரு சிலரோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இப்படியாகத்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கும் ஒன்பது கட்சி கூட்டு, பத்து கட்சிக் கூட்டென பல செய்திகள் வந்தன. தப்பி தவறி ஒருவர் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தார். எந்தவித தாக்கத்தையும் இந்த கூட்டு செலுத்தாது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கிறோம். மிகுதி 12 சபைகளுக்கான வேட்புமனுக்களை நாளை (இன்று) சமர்ப்பிப்போம்.

நிறைந்த போட்டியின் மத்தியிலே வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. அதனால் தாமதித்து தான் இறுதி செய்து கொண்டிருக்கிறோம்.

கட்சியினுடைய தீர்மானத்தின் படி எந்த ஒரு சபைக்கும் முதல்வரோ தவிசாளரோ அறிவிக்கப்படப் போவதில்லை. தேர்தலுக்கு பிறகு தான் அது சம்பந்தமாக கட்சி முடிவு எடுக்கும்.

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்த தேர்தல் முறைமையில் எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம்.

ஆனாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம். அப்படியாக அல்லது பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் அந்தந்த சபைகளையும் சபைகளில் வேறு யாருக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது என்பதை பொறுத்து நாங்கள் தீர்மானிப்போம் என்று தெரிவித்திருந்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article